Wednesday, 28 December 2011

குப்பைத்தொட்டி குழந்தை



இளங்கன்று பயம் அறியா
ஏங்குகின்ற இந்த உலகில்..
ஏற்றம் மிக்க தாய் வயிற்றில்
என்னை
ஏன் படைத்தார்கள்?
நீங்கா உறவில் பிறந்ததற்காகவா.. 
இல்லை

பிறப்பு என்ற பெண் பூமியில்
பெண்ணாக பிறந்ததற்காகவா..?
என் ஆசை இல்லா
என் மேல் விழுகின்ற
குப்பையை காப்பாற்றவா..?
இல்லை
குப்பை என்னை காப்பாற்றவா..?
இருந்து பெற்ற என் தாயே..
உனக்கு இரக்கம் இல்லையா?
அரசு தொட்டில் என்றார்களே?!
நீ..
அங்கு சென்று பார்க்கலையா?
பார்க்காதே..
என்னை பத்து மாதம்
சுமக்காதே..
பத்து நாளில்
கொன்று விடு!!

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொடுமைதான்...

ஆனால் தற்போது இந்தநிலை இல்லை என்றே தெரிகிறது...

அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது...

நல்லதொரு கவிதை

கோவி said...

அருமை..வாழ்த்துக்கள்.

சசிகலா said...

நல்ல வரிகள்

Post a Comment