Friday, 30 December 2011

புத்தாண்டு வாழ்த்து



இந்த பூமி

பிரபஞ்சத்தில் 

புன்னகை பூத்து..

புது மலராய்

புது முகமாய்

முன்னின்று வந்து..

காவு கொள்ள 

கடல் வந்த

சுனாமி வேண்டாம்..

நல்ல சுகமான சுகத்தில் 

புயல் வேண்டாம்..

புன் முருவல் பூக்கா

புது வெள்ளம் வேண்டாம்..

வேண்டுகிற மக்களின்
 
மன எரிமலை நீக்கி..

அன்பென்ற உன்னையே

தன்னென்று கொண்டு..

விருந்தோம்ப நீ வர

உனை விரும்பி 

அழைக்கிறோம்..

தலை தாழ்த்தி 

வணங்குகிறோம்..

எமை வாழ்த்த 

வேண்டுகிறோம்!!

இறைவா..!!!

Thursday, 29 December 2011

குடிகாரன்




அன்றோ
இதய வீட்டில்
உன்னை
குடி வைக்க
துடித்த உன்
வீட்டுக்காரன்..

இன்றோ..
உன் நினைவை
மறக்கத்
துடிக்கும்
குடிகாரன்..!!

Wednesday, 28 December 2011

குப்பைத்தொட்டி குழந்தை



இளங்கன்று பயம் அறியா
ஏங்குகின்ற இந்த உலகில்..
ஏற்றம் மிக்க தாய் வயிற்றில்
என்னை
ஏன் படைத்தார்கள்?
நீங்கா உறவில் பிறந்ததற்காகவா.. 
இல்லை

பிறப்பு என்ற பெண் பூமியில்
பெண்ணாக பிறந்ததற்காகவா..?
என் ஆசை இல்லா
என் மேல் விழுகின்ற
குப்பையை காப்பாற்றவா..?
இல்லை
குப்பை என்னை காப்பாற்றவா..?
இருந்து பெற்ற என் தாயே..
உனக்கு இரக்கம் இல்லையா?
அரசு தொட்டில் என்றார்களே?!
நீ..
அங்கு சென்று பார்க்கலையா?
பார்க்காதே..
என்னை பத்து மாதம்
சுமக்காதே..
பத்து நாளில்
கொன்று விடு!!

Tuesday, 27 December 2011

நடிகை



 என் வேதனை
என் சோகம்
என் துன்பம்
என் மகிழ்ச்சி

வேசத்தின் நிழல்
பிம்பத்தின் உருவம்
இவையாவும் இருந்தும்
கூட..
வாழ்வில் நடிக்கும்
நான் ஒரு நடிகை !!


Saturday, 24 December 2011

கிருஸ்துமஸ் வாழ்த்து



உலகின் ஒளியே - எங்கள் 

உயிரின் ஒலியே..


உண்மையின் உருவே - எங்கள் 

உணர்வின் உணர்வே..

அண்டமும் கண்டமும்

அசைவும் காற்றும்

நீரும் நெருப்பும்

நிலவும் வானும்

உன் அசைவின் ஆக்கம்

உன் இசையின் இயக்கம்

உன் ஜனனமும் மரணமும்

உலகின் தத்துவம்

இரக்கமும் அன்பும்

இருவிழியென உணர்த்தி

இன்பமும் மகிழ்வும்

எங்களுக்களித்து

எம்மைக் காத்திடும் தேவா..

என்றும் உன் நினைவே..

எல்லாம் உன் செயலே.. 

எந்நாளும் உன்னைப் 

போற்றிடுவோம்..

எங்களை ரட்சிப்பாய் 

என வேண்டுகிறோம்..!!

Tuesday, 20 December 2011

தூண்டிலில் விழுந்த தூரல்



ஆகாயமும் மழையும் 

எனக்கும் 

பிரமிப்பூட்டுபவைதான்..

அதை வருணித்து எழுத 

வார்த்தைகள் தேடி

மாடியில் மல்லாந்து படுத்து.. 

காதலையும்
 
கழுத்துச் சுழுக்கையும்
 
மறந்து..

வார்த்தைகளுக்குத்
 
தூண்டில் போட்டு..

வெறுமையை 

வெளிக்கொணர்ந்து 

தோற்று..


பேனாவை
 
மூடப் போகையில்

சாரல் வந்தது.. 

சரசரக்க…!!

Thursday, 15 December 2011

விழியில் விழுந்தவள்




தோழி நீ
சிரிக்காமல்
இருந்திருந்தால்
நான்
சிந்தித்திருப்பது ஏது?!

உன் இமைகள்
விரிக்காமல்
இருந்திருந்தால்
நான்
விழிக்க நினைப்பது ஏது?!

உன் பெயரைத்தானே
என்னுள் உச்சரித்தேன்
காலமே என்னை
கவிஞனாக்கியது..!
நீ என்னை
கவனிக்க…!!


Wednesday, 14 December 2011

சுவாசத்திற்கு சிறை இல்லை


கவிஞன் என்பவன்
கந்தக நெருப்பு
உரசிப் பார்த்தால்
உன்னை சுடுவான்

கவிஞன் என்பவன்
கவின்மிகு தென்றல்
தழுவிப்பார் அவன்
தன்மை புரியும்

கவிஞன் என்பவன்
கனியின் சாறு
சுவைத்துப்பார் அவன்
சூட்சுமம் தெரியும்

கவிஞன் என்பவன்
மல்லிகைத் தோட்டம்
நுகர்ந்துபார் அவன்
வாசம் புரியும்

கவிஞன் என்பவன்
தாய்மையின் வடிவம்
உரசிப்பார் அவன்
உருகிப் போவான்

கவிஞன் என்பவன்
சுதந்திர காற்று
கைக்கும் அடங்கான் எவன்
பைக்கும் அடங்கான்

எந்தக் சிறையும்
காற்றுக்கு இல்லை
காற்றும் கவிஞனும்
ஒரு தாய் பிள்ளை.

Friday, 9 December 2011

சுனாமி பாரதி



படித்த இலக்கியம்
படிக்காத காவியம்
தொடுத்த மலர்கள்
சூடிய மங்கை
மொட்டுகளின் நாணம்
பூக்களின் சிரிப்பு
வரைந்த ஓவியம்
வரையாத தூரிகை
சிற்பியின் கை வண்ணம்
செதுக்காத சிற்பம்
கோபுரத்தின் தரிசனம்
கும்பாபிசேகம்
மேகத்தின் காவியம்
பூமியின் தலை விரிப்பு
இளம் மங்கையின் நாணம்
இயற்கையின் உயிர்ப்பு
மழைத் தூரலின் நாணம்
மண்ணின் வெள்ளம்
காற்றில் நாணம்
கடல் உள் சீற்றம்
காதலன் நாணம்
கடத்தலின் காணம்
நெருப்பின் நாணம்
நெஞ்சத்தின் பரிதவிப்பு
நீரின் நாணம்
நீங்கா துயரம்
பஞ்ச பூதத்தின் நாணம்
பஞ்ச லோகத்தின் பிரபஞ்சம்
இத்தனையும் படித்த இலக்கியத்தோடு
இன்புற்று ஆசை கொண்டு,
பாசம் கொண்டு, நட்பு கொண்டு,
உள்ளம் கொண்டு, வாழும் மனிதா…..?
இயற்கையை ஏற்றி விட்ட இறைவா…!
உன் மனம் கோனும் போது
அது தான்              
சுனாமியா……?
சூறைக்காற்றா…….?
பூமி அதிர்வா……..?
கடல் கொந்தளிப்பா……….?
எரிமலை வெடிப்பா…………?
தீ நெருப்பா…………?
எது என்று சொல்………!
கேட்கிறேன் மௌனமாய்……..
அடங்கி விடு ஆண்மாவாய்…………
இன்னும் கொஞ்சம் இருக்கட்டும்
இந்த பூமி பிரதிபலிக்க……….!

உன் நினைவாய் நாங்கள் இருக்க
இருக்கட்டும் இளம் பிஞ்சுகள்
பிஞ்சுமகன் நோக பிதாமகன்
பிறக்கட்டும் பிள்ளைகளாய்……………
பிறந்த நம் பூமியில்
பூக்கட்டும் புன் முறுவல் பூக்களாய்…….
சிரிக்கட்டும் சிங்கார செந்தமிழாய்
அமுது ஊட்ட தமிழ்தனை தளைக்க
தழைத்து விடுவோம் தமிழகத்தில்
தமிழ் மொழியாய், தமிழ் செழிப்பாய்,
தமிழ் மீது பண்பு, பாசம், பரிவு, கொண்டு
பாடிடுவோம் பாரதி கவிதையாய்
பாரினில் போற்றிடுவோம்!
பாரத்தை வளர்த்திடுவோம்!
வான் புகழ் பாடிடுவோம்!
வாழ்க தமிழ்!!
வளர்க தமிழகம்!!!

Sunday, 4 December 2011

தலை பிரசவம்




13-ம் நூற்றாண்டு
பராக்கிராம பாண்டிய மன்னன்
பராக்கிராம பாண்டிய பேரி
தற்போதைய இனிய இடைகால்
நெல்லை சீமையாம்……….!
குற்றால சாரலாம்…………..!
தென்காசி தூரலாம்………..!
சாரல் போற்றும்…………..……!
சாந்தமான இனிமையான இடைகாலாம்………..

இடைகால் பெருமைக்கு
இனிமைகள் நிறைய உண்டு

தூரலுக்கு சாரல் மிச்சம்
சாரலுக்கு மழை மிச்சம்
மழைக்கு வயல் மிச்சம்
வயலுக்கு உழவன் மிச்சம்
உழவனுக்கு உளக்கு மிச்சம்
என்று வகை பாடும் வசந்தமாய்
வருங்கால சந்ததியை வாழ்த்தி
வாழும் செஞ்சுரியை போட்ட பெரிசுகளும்!.
விரும்பும் மலைகளின் மலைச்சாரலில்
மேற்கு தொடர்ச்சி தொடர் வானில்
வானை அளக்கும் மலைகளும்
மலையை அளக்கும் மரங்களும்
மண் தொட்டு விண் தொட்டு
விண்ணை அளக்கும் மரங்களும்
கரையை அளக்கும் ஆறுகளும்
ஆறுகளை அளக்கும் தென்னை மர சோலைகளும்
சோலைக்கு அழகு ஊட்டும் தோகை மயில்களும்

கருப்பா நதியும் கமுகு மரமும்
அடவி நதியும் அழகு சேர்க்கும்.
கள்ளிபுளி மேடு நதியும் கரை சேர்க்கும்
கரைகளின் காவலனாய் வீற்றிருக்கும்
தென்னை மர சோலையாம்
சோலைக்குள் ஆடும் தோகை மயிலாம்

இருமரங் கரையின் மத்தியில் நதியாம்
நதியின் மத்தியில் வெளிப்பகுதி வயல்வெளியாம்
வெளி வரப்பு வயலாம் துள்ளிச்செல்லும் மீன்களாம்
கொக்கு பசியார ஏங்கும் மீன்களாம்
மீன்கள் பசியார சின்னஞ்சிறு புழுப்பூச்சிகளாம்

புதுமை மிகு எங்கள் பூமியில்
குளித்து மகிழ குண்டாறு
அக மகிழ அடவி நயினார்
தலை முழுக்க தலையணை
தாகம் தனிக்க தாமிரபரணி
காதல் கொள்ள கடணா நதி
கானம் பாட கருணை நதி
பாவங்கள் போக்க பாபநாசம்
பார்த்து மகிழ பான தீர்த்தம்.

மலையின் அடியின்
கரையின் அடியின்
காவலர்கள் கனவாக,
காவியத்தின் உறைவிடமாக,
வீர நடை போடும் வீரனாக,
வீர வணக்கம் வீழ்ந்துவிடா
விம்மும் மலைகளின் மலைச்சாரலில்
மணிமுத்தான முந்தானையில்
முடிந்துவிட்ட மணிமுத்தாறு.

மறக்க முடியுமா

காலங்கள் மறைந்தாலும்
கலாப்பிரியா கவிதை மறக்குமா…?
சுதந்திர கிருஷ்ண பாரதியார் மறக்குமா……?
கல்வி வேண்டும் எமது கடைக்கோடி மக்களுக்கு,
காலங்கள் மறைந்தாலும் மறக்குமா.?
மறைந்த A.R.சுப்பையா முதலியாரை,
கல்வி தந்தையாம் முன்னால்
ஒரு சட்ட மன்ற உருப்பினராம்
சமுதாயத்தின் சரித்திரம் படைத்தவராம்.
கண்டு….நின்று….வென்று
பெருமை பெற்ற எங்கள் ஊர்.


ஊரின் பின்னனியில்
வள்ளுவனுக்கு மகிடமாய்
மகிழ்ச்சியை நிலை நிறுத்தி
நின்று புகழ்பாட நின்று
நின்று நடைபாட
திக்கட்டும் பறந்த
திருக்குறள் திவ்வியத்தை
திறம்பட நடைபயில
நடை கண்ட நடராஜனும் உண்டு
திருக்குறள் திரவியத்தை
திருடாமல் தின்று விட்டு
திகைத்த மக்களுக்கு
திக்கடும் பரவட்டும்
பறந்த எம் ஊரினில்
திருக்குறளுக்கு என்றே
திருவள்ளுவர் கழகமும் உண்டு
தென்பொதிகை தென்காசியில்
களனியில் உண்டு காதுகளுக்கு

இத்தனையும் மிஞ்சிவிட
இதயம் உறைபாட
இமைகள் கண்பாட
இதயம் தாலாட்ட
தமிழகத்தின் தென் பொதிகையில்
தென் சாரலாம்
தென்காசி பட்டணத்தில்
பக்கத்தில் உள்ளது எமது கிராமம்.

சமுதாயத்தை சீர்படுத்த சமத்துவபுரமப்பா…………………
சங்கரப்பா சாய்ந்தாடப்பா சங்குபுரமப்பா……………………
தூணப்பா துரையப்பா துரைச்சாமிபுரமப்பா.........
வானப்பா வந்தப்பா வள்ளியம்மாள்புரமப்பா.......
அந்தாப்பா இந்தாப்பா அருணகிரிபுரமப்பா…………..
ஞானப்பா நந்தமப்பா நயினாகரமப்பா…………………….
காணப்பா கடவுளப்பா காமராஜபுரமப்பா……………..
சீமையப்பா சிவனப்பா சின்னபனைங்குளமப்பா………………
இத்தனையும் உள்ளடக்கியது இடைகாலப்பா………………….
இதுவே எங்கள் ஊரப்பா……………………