13-ம் நூற்றாண்டு
பராக்கிராம பாண்டிய மன்னன்
பராக்கிராம பாண்டிய பேரி
தற்போதைய இனிய இடைகால்
நெல்லை சீமையாம்……….!
குற்றால சாரலாம்…………..!
தென்காசி தூரலாம்………..!
சாரல் போற்றும்…………..……!
சாந்தமான இனிமையான இடைகாலாம்………..
இடைகால் பெருமைக்கு
இனிமைகள் நிறைய உண்டு
தூரலுக்கு சாரல் மிச்சம்
சாரலுக்கு மழை மிச்சம்
மழைக்கு வயல் மிச்சம்
வயலுக்கு உழவன் மிச்சம்
உழவனுக்கு உளக்கு மிச்சம்
என்று வகை பாடும் வசந்தமாய்
வருங்கால சந்ததியை வாழ்த்தி
வாழும் செஞ்சுரியை போட்ட பெரிசுகளும்!.
விரும்பும் மலைகளின் மலைச்சாரலில்
மேற்கு தொடர்ச்சி தொடர் வானில்
வானை அளக்கும் மலைகளும்
மலையை அளக்கும் மரங்களும்
மண் தொட்டு விண் தொட்டு
விண்ணை அளக்கும் மரங்களும்
கரையை அளக்கும் ஆறுகளும்
ஆறுகளை அளக்கும் தென்னை மர சோலைகளும்
சோலைக்கு அழகு ஊட்டும் தோகை மயில்களும்
கருப்பா நதியும் கமுகு மரமும்
அடவி நதியும் அழகு சேர்க்கும்.
கள்ளிபுளி மேடு நதியும் கரை சேர்க்கும்
கரைகளின் காவலனாய் வீற்றிருக்கும்
தென்னை மர சோலையாம்
சோலைக்குள் ஆடும் தோகை மயிலாம்
இருமரங் கரையின் மத்தியில் நதியாம்
நதியின் மத்தியில் வெளிப்பகுதி வயல்வெளியாம்
வெளி வரப்பு வயலாம் துள்ளிச்செல்லும் மீன்களாம்
கொக்கு பசியார ஏங்கும் மீன்களாம்
மீன்கள் பசியார சின்னஞ்சிறு புழுப்பூச்சிகளாம்
புதுமை மிகு எங்கள் பூமியில்
குளித்து மகிழ குண்டாறு
அக மகிழ அடவி நயினார்
தலை முழுக்க தலையணை
தாகம் தனிக்க தாமிரபரணி
காதல் கொள்ள கடணா நதி
கானம் பாட கருணை நதி
பாவங்கள் போக்க பாபநாசம்
பார்த்து மகிழ பான தீர்த்தம்.
மலையின் அடியின்
கரையின் அடியின்
காவலர்கள் கனவாக,
காவியத்தின் உறைவிடமாக,
வீர நடை போடும் வீரனாக,
வீர வணக்கம் வீழ்ந்துவிடா
விம்மும் மலைகளின் மலைச்சாரலில்
மணிமுத்தான முந்தானையில்
முடிந்துவிட்ட மணிமுத்தாறு.
மறக்க முடியுமா
காலங்கள் மறைந்தாலும்
கலாப்பிரியா கவிதை மறக்குமா…?
சுதந்திர கிருஷ்ண பாரதியார் மறக்குமா……?
கல்வி வேண்டும் எமது கடைக்கோடி மக்களுக்கு,
காலங்கள் மறைந்தாலும் மறக்குமா.?
மறைந்த A.R.சுப்பையா முதலியாரை,
கல்வி தந்தையாம் முன்னால்
ஒரு சட்ட மன்ற உருப்பினராம்
சமுதாயத்தின் சரித்திரம் படைத்தவராம்.
கண்டு….நின்று….வென்று…
பெருமை பெற்ற எங்கள் ஊர்.
ஊரின் பின்னனியில்
வள்ளுவனுக்கு மகிடமாய்
மகிழ்ச்சியை நிலை நிறுத்தி
நின்று புகழ்பாட நின்று
நின்று நடைபாட
திக்கட்டும் பறந்த
திருக்குறள் திவ்வியத்தை
திறம்பட நடைபயில
நடை கண்ட நடராஜனும் உண்டு
திருக்குறள் திரவியத்தை
திருடாமல் தின்று விட்டு
திகைத்த மக்களுக்கு
திக்கடும் பரவட்டும்
பறந்த எம் ஊரினில்
திருக்குறளுக்கு என்றே
திருவள்ளுவர் கழகமும் உண்டு
தென்பொதிகை தென்காசியில்
களனியில் உண்டு காதுகளுக்கு
இத்தனையும் மிஞ்சிவிட
இதயம் உறைபாட
இமைகள் கண்பாட
இதயம் தாலாட்ட
தமிழகத்தின் தென் பொதிகையில்
தென் சாரலாம்
தென்காசி பட்டணத்தில்
பக்கத்தில் உள்ளது எமது கிராமம்.
சமுதாயத்தை சீர்படுத்த சமத்துவபுரமப்பா…………………
சங்கரப்பா சாய்ந்தாடப்பா சங்குபுரமப்பா……………………
தூணப்பா துரையப்பா துரைச்சாமிபுரமப்பா.........
வானப்பா வந்தப்பா வள்ளியம்மாள்புரமப்பா.......
அந்தாப்பா இந்தாப்பா அருணகிரிபுரமப்பா…………..
ஞானப்பா நந்தமப்பா நயினாகரமப்பா…………………….
காணப்பா கடவுளப்பா காமராஜபுரமப்பா……………..
சீமையப்பா சிவனப்பா சின்னபனைங்குளமப்பா………………
இத்தனையும் உள்ளடக்கியது இடைகாலப்பா………………….
இதுவே எங்கள் ஊரப்பா……………………