பள்ளி நாட்களில் என்னோடு
கைகோர்த்து விளையாடிய சிநேகிதர்கள்..
சோறும், பாலும் தந்ததற்காகத்
தேசிய கீதத்தை உரக்கப்பாடிய பகல்கள்..
தொட்டு விளையாடத்
தெருமுனையில் நின்ற குத்துக்கல்..
மாங்கொட்டை, தெலுக்காய், பம்பரம், கோலி
விளையாடிய மகிழ்ச்சி நேரங்கள்..
ரோட்டில், தெருவில் ஓசையோடு
ஓடிய என் கூந்தவண்டி..
வரிசை பிடித்து சந்தையில்
கஞ்சி வாங்கிக் குடித்த வசந்த நடுப்பகல்..
காலில் மிதிபட்ட காரச் சேவு
என் வாயில் வந்த கனம்..
ஓலை இடுக்கின் வழி
உள்ளே புகுந்து பார்த்த படங்கள்..
உறவுகளை ஒன்று சேர்க்க
வருமானத்தைப் பறிகொடுத்த வருடங்கள்..
நான் குடியாய் அமர
குடியரசு தினத்தில் துன்பத்தைத்
தூக்கிகொண்டு கப்பலேறியது பகல்!!

2 comments:
This is my Good luck that I found your post which is according to my search and topic, I think you are a great blogger, thanks for helping me out from my problem..
BMW Z3 AC Compressor
Post a Comment